பேருந்தை விட்டு கழன்று ஓடிய சக்கரம் : 80 பேருடன் பயணித்த பேருந்து விபத்து!

-பதுளை நிருபர்-

பதுளை ஸ்பிரிங்வெளி வீதியில் வீரியபுர பகுதியில் பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்பகுதியில் உள்ள சக்கரம் ஒன்று விலகியதில் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை பேருந்து பெத்தேகமயில் இருந்து ஸ்பிங்வெளி ஊடாக பதுளைக்கு சென்று கொண்டு இருக்கும் போது, வீரியபுர பகுதியில் வைத்தே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்து விபத்துக்குள்ளான போது, பேருந்தில் சுமார் 80 பேர் வரை பயணித்துள்ளதாகவும், எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பயணிகள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்