
பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட நபர் விபத்தில் பலி
கிளிநொச்சி ஏ-9 வீதியின் 155 ஆம் கட்டை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள்சாரதியே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
155 ஆம் கட்டை பகுதியில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிய சந்தர்ப்பத்தில், அதனை மோட்டார்சைக்கிள் ஒன்று முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.
இதனையடுத்து அதே திசையில் சென்ற பாரவூர்தி குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கிளிநொச்சி காவல்துறையில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
