பேருந்து விபத்து : 9 பேர் காயம்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று கடுகன்னாவ பகுதியில் விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளனர்
குறித்த பேருந்து கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த போது வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.