பேருந்து விபத்து: 7 மாணவர்கள் காயம்

களுத்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை  இரண்டு பேருந்துகள் மோதி இடம்பெற்ற விபத்தில் 7 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணையிலிருந்து மஹரகம நோக்கி செல்லும் பிரதான வீதியில் ஹொரணையிலிருந்து மஹரகம நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் ஹொரணையிலிருந்து குடா உடுவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதுடன் காயமடைந்த மாணவர்கள் ஹொரண ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதிகள் இருவரையும் ஹொரணை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.