பேருந்து விபத்து

புத்தளத்தில் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.

சொகுசு பேருந்து வேகமாக மன்னார் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழப்புக்கள் இதுவரையிலும் பதிவாகவில்லை எனினும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளமையினால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்