பேருந்து விபத்து: 15 பேர் காயம்

அனுராதபுரம் மரதன்கடவல பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை பேருந்துவிபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் காயமடைந்து மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மரதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.