பேருந்து விபத்து: குழந்தைகள் உட்பட 27 பேர் காயம்

மஹியங்கனையில் உள்ள வியானினி கால்வாய் அருகே இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளனர்.

பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணத்தால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில் பேருந்து கால்வாயில் விழுவதை தடுப்பதற்காக பேருந்தின் சாரதி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பயணிகள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்