பேருந்து விபத்து: ஒருவர் மரணம்

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் இதன்போது 51 வயதான நபரே உயிரிழந்ததுடன்  காயமடைந்த 7 பேர் குருநாகல் வைத்தியசாலையிலும் 11 பேர் நாரம்மல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.