பேருந்து விபத்தில் 45 பேர் பலி: 8 வயது சிறுமி மாத்திரம் உயிருடன் மீட்பு

தென்னாப்பிரிக்காவின் வட மாகாணமான லிம்போபோவில் (Limpopo) இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு கொண்டாட்டங்களுக்காக யாத்திரை சென்ற பேருந்தே வேகக்கட்டுப்பாட்டை இழந்து 165 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேருந்தில் சாரதி உள்ளிட்ட 46 பேர் பயணித்த நிலையில், அவர்களில் 8 வயது சிறுமி ஒருவர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

பலத்த காயமடைந்த அவர், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.