பேருந்து விபத்தில் இரு பெண்கள் பலி , பலர் காயம்
நுவரெலியா நோர்டன் பிரிட்ஜ் பகுதியில் ஸ்ரீ பாத யாத்திரைக்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
பேருந்தில் குறைந்தது 60 பேர் இருந்ததாகவும், அது 100 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாகவும், இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 28 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

