பேருந்து நடத்துநரிடம் மிகுதி பணத்தை பெற்று கொண்டவர் பரிதாபமாக மரணம்

கொழும்பு – வெல்லவாய பிரதான வீதியில் பயணித்த பேருந்தின் மிதி பலகையில் பயணித்த நபர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

அம்பந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த நபர் பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்துக்கொண்டிருந்த போது பஸ் நடத்துநரிடம் பயணச்சீட்டை பெற்று மிகுதி பணத்தை தனது பணப்பையில் வைக்க முற்பட்ட போது தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரின் உதவியுடன் அம்பந்தோட்டை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.