
பேருந்து சேவைகள் பாதிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் பேருந்து சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
குறிப்பாக வலப்பனை, நுவரெலியா, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள பல வீதிகளில் பேருந்துச் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (செயற்பாடு)பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால், பல வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பேருந்து சேவைகளை முன்னெடுப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பதுளை, மாவனெல்ல, மற்றும் கேகாலை உட்பட பல பகுதிகளிலும் 153 பேருந்துகள் சேவையில் ஈடுபட முடியாமல் உள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே. நாடு முழுவதும் மொத்தம் 7,332 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
