பேருந்து கட்டணம் தொடர்பிலான அறிவிப்பு
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்படாது என பேருந்து தொழிற்சங்க சங்கங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலை குறைவினால் பேருந்து கட்டணத்தை திருத்த முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
“பல ஆண்டுகளாக விலை ஒரு சூத்திரத்தின் கீழ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.
விலை சூத்திரத்தின்படி, இந்த 10 ரூபா விலைகுறைப்பு நான்கு சதவீதத்தை எட்டவில்லை. எனவே, தற்போதைக்கு பேருந்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்படாது” என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
