பேருந்து கட்டணத்தில் திருத்தமில்லை!

எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாதாந்த எரிபொருள் விலை திருத்துக்கு அமைய நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன .

289 ரூபாயாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாயாகும்.

325 ரூபாயாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாயாகும்.

305 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 299 ரூபாயாகும்

இதேநேரம் ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எத்தகைய மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை .

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாய்க்கும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 185 ரூபாய்க்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது