பேருந்து கட்டணங்கள் கணிசமான அளவு அதிகரிக்கப்படும்!

எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பேருந்து கட்டணங்கள் கணிசமான அளவு அதிகரிக்கப்படும் எனத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் நிர்வாகத்தைத் தொடர்ந்து புத்தாண்டின் தொடக்கத்தில் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்த்தோம், ஆனால் அந்த நம்பிக்கை தற்போது கனவாக மாறியுள்ளது, என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணம் குறைக்கப்பட வேண்டுமானால், ஒரு லீற்றர் டீசலின் விலையை குறைந்தது 30 ரூபாவாக குறைக்க வேண்டும்.

மேலும், எரிபொருள் விலை மட்டுமன்றி, உதிரிப் பாகங்கள் மற்றும் இதர உபகரணங்களின் விலையும் குறைய வேண்டும்.

தனியார் பேருந்து சேவை தற்போது நெருக்கடியான நிலையில் உள்ளது.

எனவே, செலவுகளை நிர்வகிக்க இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பின், பேருந்து கட்டணத்தைக் கணிசமான அளவு அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.