பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு?

பேருந்து பயணக் கட்டணங்களை அதிகரிக்குமாறு பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒட்டோ டீசலின் விலை அதிகரித்தமையினால் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்க வேண்டும் எனவும் குறித்த விடயம் தொடர்பில் இன்று வியாழக்கிழமை கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம்,  பேருந்து பயணக் கட்டணங்கள் 10 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்சித்  கோரிக்கை விடுத்துள்ளார்.