பேருந்து-எரிபொருள் பவுசருடன் மோதிய விபத்தில் இருபது பேர் பலி

பாகிஸ்தானின் முல்தானில், அதிவேகமாக பயணித்த பயணிகள் பேருந்து, எரிபொருள் பவுசருடன் மோதிய விபத்தில் இருபது பேர் உயிரிழந்துள்ளனர்.

பந்தயத்தில் 3 பஸ்கள் அதிவேகமாக ஓடியதாகவும், அதில் ஒன்று வீதியில் நின்ற எரிபொருள் பவுசருடன் மோதி தீப்பிடித்ததாகவும் பாகிஸ்தான் பொலிஸார் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதுகாப்புப் படையினரால் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.