பேருந்தும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்து

-பதுளை நிருபர்-

வெள்ளவெல பகுதியில் பிபிலையிலிருந்து பதுளைக்கு சென்று கொண்டிருந்த பிபிலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், பசறை பகுதியிலிருந்து லுணுகலை நோக்கி சென்று கொண்டிருந்த உந்துருளி ஒன்றும், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், உந்துருளியை செலுத்திய 29 வயதுடைய நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உந்துருளியின் வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தின் சாரதி லுணுகலை பொலிஸார் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.