பேருந்துடன் மோதிய பாரவூர்தி: 16 பேர் வைத்தியசாலையில்
பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திகதுர பிரதேச சபைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தொழில் புரியும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எதிர்த் திசையில் பிரவேசித்த பாரவூர்தியில் மோதுண்டதிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
