பேருந்தில் பாடசாலை மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை

குருநாகலை – கும்புகெடே பகுதியில் பேருந்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது குறித்த பேருந்தின் சாரதி, நடத்துனர்,  மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தரம் பதின்னொன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவி, பாடசாலை விட்டு வீட்டுக்குச் செல்லும் போது கும்புகெடே பகுதியில் வைத்து பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்தநிலையில், மாணவி குருநாகலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்