பேருந்தில் சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை

பேருந்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த பதினேழு வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர இலக்கம் 02 நீதிமன்ற நீதவான் ஜனித பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

காலி பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மாகொல பகுதியில் உள்ள பாடசாலைக்குச் செல்வதற்காக கடந்த 27ஆம் திகதி காலை கிரிபத்கொடவில் இருந்து கராபுகசந்தியா செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஆசனத்தில் அமர்ந்து சென்று கொண்டிருந்த போது வேறொரு இடத்தில் இருந்து பேருந்தில் ஏறி, மாணவி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.

இதன்போது மாணவி பயந்து, பீதியடைந்து, பேருந்தை விட்டு இறங்க முயன்ற போது, விடயத்தை அறிந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் பயணிகள் சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பிரதான காவல்துறை பரிசோதகர் அஜித் விஜேசிங்கவின் பணிப்புரைக்கமைய குறித்த நபரை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது நீதவான் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.