பேருந்தில் இருந்து பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

கொழும்பு பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை கெமுனுபுர பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணொணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் பாணந்துறை பிரதேசத்தில் இருந்து மஹியங்கனை நோக்கி செல்லும் பேருந்தில் பலாங்கொடை மாமல்கஹ பிரதேசத்தில் வைத்து தவறி விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிழிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.