
பேருந்திலிருந்து கீழே விழுந்த பெண்
கிளிநொச்சியில் அரச பேருந்தில் வேலைக்காக சென்ற பெண் நேற்றைய தினம் வியாழக்கிழமை பேருந்தில் இருந்து இறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த பெண் நேற்றைய தினம் பேருந்தில் இருந்து இறங்குவதை அவதானிக்காத சாரதி பயணிகளை ஏற்றிய பின்னர் பேருந்தை செலுத்தியுள்ளார்.
இதன்போது கீழே விழுந்த குறித்த பெண் சிறு காயங்களிற்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
