பேருந்தின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் 4 பேர் காயம்

அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியின் கொஸ்கம – மிரிஸ்வத்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு தனியார் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி நேற்று இரவு புறப்பட்ட குறித்த பேருந்தின் மீதே இந்த மரம் முறிந்து விளுந்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.