பேராதனை பல்கலை மாணவனின் தவறான முடிவு

கண்டி ரியகமவில் உள்ள விடுதி ஒன்றில் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

கம்பஹா ஹப்புகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பேராதனை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் கற்கும் வடமேல் (வயம்ப) பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவர் மூன்று நாட்களாக தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த மாணவன் மேலும் மூன்று மாணவர்களுடன் கண்டி ரியகமவில் உள்ள விடுதியில் தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏனைய மூன்று மாணவர்களும் வடமேல் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதும் அவர்கள் ஆறு மாத பயிற்சி நெறிக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளனர்.

மாணவனின் மரண விசாரணை நேற்று முன் தினம் புதன் கிழமை மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்னவினால் நடத்தப்பட்டது.

இதேவேளை குறித்த மாணவன் தனது மடிக்கணணியில் குறிப்பு ஒன்றையும் பதிவு செய்து வைத்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த குறிப்பில் வாழ்க்கை என்ற வினோதமான திரைப்படத்தை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், சமூகத்தை புரிந்து கொள்ள முடியாமல் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவ அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களை கருத்திற்கொண்ட மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன இது தற்கொலை என தீர்மானித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்