பேராசிரியர் சஜ்ஜிவ் ஆரியசிங்கவுக்கு ஜப்பான் தூதுவர் பாராட்டு

 

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் அறிவியல் பீடத்தின் உடலியல் மூத்த பேராசிரியர் சஜ்ஜிவ் ஆரியசிங்கவுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர புரிதல் மற்றும் நட்பை ஆழப்படுத்துவதில் பேராசிரியர் ஆரியசிங்கவின் சிறந்த பங்களிப்புகளைக் பாராட்டும் விதமாக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பரிசளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ரஞ்சித் டபிள்யூ. பல்லேகம, ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.