
பேனா வடிவில் துப்பாக்கி: இருவர் கைது
யக்கல – கெசல்வதுகொட வீதிக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை வெளிநாட்டில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட 9 மி.மீ ரக துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யக்கல பிரதேசத்தை சேர்ந்த 29 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஏதேனும் குற்றச்செயல்களுக்கு திட்டமிட்டுள்ளனரா என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்