பேத்தாழை கலைமகள் முன்பள்ளியின் கலை விழா

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட பேத்தாழை கலைமகள் முன்பள்ளியின் கலை விழா ஆசிரியை கேமலதா யேசுரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.

இப்  பாடசாலையில் கல்வி கற்று தரம் 1 இற்கு வகுப்பேற்றம் பெற்று செல்லும் மாணவர்களினை கௌரவிப்பதுடன் புதிய மாணவ்களை வரவேற்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மாணவ்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், செயலாளர் ச.நவநீதன்,சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் அப்துல்லாஹாருன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.