பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை-நியமிக்கப்பட்ட பதவி உயர்வுகளை வழங்கல் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத பொதுமுகாமையாளர் உடனான நேற்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன கூறினார்