பேசும் குப்பைத் தொட்டி: ஆச்சரியத்தில் மக்கள் (வீடியோ)

ஹொங்கொங்கில் பேசும் குப்பைத் தொட்டி ஒன்று அந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த குப்பைத் தொட்டி அங்குமிங்கும் நகர்ந்து, மக்களிடம் “நான் குப்பையைச் சாப்பிட விரும்புகிறேன்” என கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குப்பையை போட்டவுடன் “ஆ, என்ன சுவையாக இருக்கிறது” என குப்பைத் தொட்டி மகிழ்ச்சியுடன் பதிலளிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

மக்கள் தங்கள் குப்பைகளை அப்புறப்படுத்த ஊக்குவிப்பதே இதன் முதன்மையான குறிக்கோளாக இருந்தாலும், இந்த குப்பைத் தொட்டி பலருக்கு பொழுதுபோக்கு சின்னமாகவும் மாறியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்