பேக்கரி உற்பத்திகளின் விலை குறைகிறதா?
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்
நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகளில் 25 சதவீதமானோரே சமையல் எரிவாயு மூலம் பேக்கரி உற்பத்திகளை மேற்கொள்கின்றனர்.
எனவே பேக்கரி உணவு உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கமுடியாது.
அதேநேரம், சமையல் எரிவாயு விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில் விலைத்திருத்தங்களை தமது சங்கம் மேற்கொள்விலை என அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்