பெல்ஜியத்தூதுவர் – அமைச்சர் நஸீர் அஹமட் சந்திப்பு!

-திருகோணமலை நிருபர்-

புது டில்லியில் இருந்து பணியாற்றும் இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவர் Diier Vanderhasselt நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சுக்கு வருகை தந்து அமைச்சர் நஸீர் அஹமட் உடன் பரஸ்பர கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இரு நாடுகளுக்கிடையிலான சுற்றாடல் அனுபவங்கள், வரலாற்று ரீதியிலான நல்லுறவு என்பன தொடர்பாகவும் கருத்துப்பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையின் பொருளாதார சிக்கல் இத்தீர்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்கும் பெல்ஜியத்தின் பங்களிப்பு தொடர்பாக அமைச்சர் நஸீர் அஹமட் நன்றி தெரிவித்தார்.