பெற்ற குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசிய கொடூர தாய்
அமெரிக்காவில் பிறந்த குழந்தையை உயிரோடு பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசிய பெண், நான்கு ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்ஜியா மாகாணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தையின் அழு குரல் கேட்டு, இரண்டு சிறுமிகள் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு குழந்தை பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.
பின்னர் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்படு பொலிஸாரால் குழந்தை பிளாஸ்டிக் பையிலிருந்து மீட்டு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்தியா என பெயரிடப்பிட்ட அந்த குழந்தையின் மரபணு பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க, அவர்கள் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தையின் மரபணு, இந்தியாவிலுள்ள ஒரு நபருக்கு ஒத்துப் போயுள்ளது.
பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அந்த குழந்தை கரிமா ஜிவானி(வயது – 40) என்ற பெண்ணுடையது என தெரிய வந்துள்ளது.
கரிமா ஜிவானியை கைது செய்து விசாரணையை தொடர்ந்ததில் கரிமா ஜிவானி மற்றொரு ஆணோடு தொடர்பிலிருந்ததால் கர்ப்பமாகியுள்ளதுடன், மருத்துவமனைக்கு செல்லாமல் காரில் குழந்தை பெற்றுக் கொண்டதை அடுத்து, குழந்தையை உயிரோடு பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசிவிட்டு சென்றுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த ஃப்ரீமேன் என்ற பொலிஸ் அதிகாரி ‘ஜார்ஜியாவில் புதிதாகப் பிறந்த குழந்தையை மருத்துவ வசதி, தீயணைப்பு நிலையம் அல்லது பொலிஸ் நிலையத்தில் விட்டுச் செல்ல அனுமதிக்கும் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் குழந்தையை வீசியது கொடூரமான செயல்’
’இது நான் பார்த்தவற்றில் மிகவும் சோகமான சம்பவங்களில் ஒன்றாக நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்