பெற்றோல் விநியோகத்தில் அதிரடி முடிவு

 

இலங்கைக்குத் தேவையான 92 ரக பெற்றோலை (Petrol 92 Octane Unleaded) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தைச் சிங்கப்பூரை சேர்ந்த Epdesa Pte. Ltd. நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

போட்டித்தன்மை வாய்ந்த ஏலக்கோரல் செயல்முறையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 2026 மார்ச் 15 முதல் செப்டம்பர் 14 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியது.

ஐந்து கப்பல்கள் மூலம் மொத்தம் சுமார் 300,000 பீப்பாய் (±5%) பெற்றோல் இதன்போது விநியோகிக்கப்படவுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC), தன்னிடம் பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்களிடம் இருந்து ஏலங்களைக் கோரியிருந்தது.

இதற்கு ஆறு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

உயர் மட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஆகக்குறைந்த மற்றும் ஆக்கபூர்வமான ஏலத்தை முன்வைத்த சிங்கப்பூரின் Epdesa Pte. Ltd. நிறுவனம் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.