
பெற்றுக்கொண்ட கடன்களை 2028 ஆம் ஆண்டளவில் செலுத்த எதிர்பார்ப்பு!
2028 ஆம் ஆண்டளவில் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்தக் கூடிய வகையில் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தின் உதவிகளை எதிர்பார்க்காமல் நாடென்ற ரீதியில் முயற்சித்து இந்தக் கடன்களை செலுத்தும் நிலைக்கு செல்ல வேண்டும் என ஜனாதிபதி கூறினார்.
மக்களின் பொருளாதார உரிமையை நிலைநாட்டுவதே இந்த பாதீட்டின் நோக்கம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.