பெரும் போகத்திற்கான உர விநியோகம் ஒக்டோபர் முதல் ஆரம்பம்

பெரும் போகத்திற்கான உர விநியோகம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், விவசாய அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ​​நவம்பர் மாதம் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இப் பருவத்தில் பயிரிடப்படும் அனைத்து நெற்பயிர்களையும் அறுவடை செய்வதற்கு தேவையான நீர் கொள்ளளவு போதுமானது, எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.