
பெரும்போக வேளாண்மைச் செய்கை ஆரம்பம்
தம்பலகமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயில்தீவு, ஆறாம்வாய்க்கால் முதலான பகுதிகளில் வேளாண்மை செய்கைக்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.
உழுதுதல்,விதைத்தல், வரம்பு சீராக்கள் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கையை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும்,இப்பெரும் போகத்துக்கான உரம்,பசளை இன்னும் வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதிலும் கமநல சேவைகள் நிலையத்தின் மூலம் அவற்றை வழங்குவதாக கூறியுள்ளனர்.
எனினும் இப்பசளைகளை உரிய காலத்துக்குள் வழங்குமாறு விவசாயிகள் கேட்கின்றனர்.
அவ்வாறு விழங்காவிட்டால் கடந்த காலங்களில் ஏற்பட்டதைப் போன்று இம்முறையும் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
“உரிய காலத்துக்குள் பசளை எண்ணையைத் தந்து எங்களுடைய விவசாயத்தை கடந்த காலங்களைப் போன்று பாதிப்புகள் ஏற்படாமல் இம்முறையாவது விளைச்சல் கிடைப்பதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
உழவுக் கூலி அதிகம் அதை நேரத்தில் டீசலின் விலை அதிகரிப்பு ஏற்பட்டதனால் உழவுக்கூலி அதிகமாக எடுகின்றார்கள், பெரும்பபோகத்துக்கான பசளை இதுவரை தரவில்லை தருவதாக கூறியுள்ளார்கள்.
நிலப் பசளை எங்களுக்கு தேவை உரிய நேரத்துக்குள் கிடைத்தால் நல்லம்”. எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



