பெரும்போக நெற்செய்கை தொடர்பில் விழிப்பூட்டல்

பாலையடிவட்டையில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை எதிர்வரும் போகத்திற்கு தயார்படுத்தும் முகமாக, வெல்லாவெளி மற்றும் மண்டூர் பிரதேசத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் நடமாடும் விரிவாக்க தொகுதியின் வளங்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வீ.பேரின்பராஜா வழிகாட்டலில், தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேலின் ஒழுங்கமைப்பில் பாலையடிவட்டை விவசாய போதனாசிரியர் ரீ.கோபியின் தலைமையில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு இடம்பெற்றது.

வெல்லாவெளி விவசாய போதனாசிரியர் மேனுஜகுணமகாராஜ் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

ஒருங்கிணைந்த பசளை பாவனை மற்றும் களை முகாமைத்துவம் தொடர்பான தெளிவான விளக்கங்களும் வழங்கப்பட்டனர்.