பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,700 ரூபா சம்பளத்திற்கு இணக்கம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை ஊதியமாக 1,350 ரூபாவும், வருகைக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்