பெருந்தோட்டங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தோட்ட நிறுவனம் இடையூறு!

-பதுளை நிருபர்-

நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷின் 2024 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் நேப்பியர் தோட்ட பாதை புனரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் தோட்ட அதிகாரியின் இடையூறு காரணமாக புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் தோட்டத் தொழிலாளர்கள் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தோட்ட அதிகாரிகளுக்கும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது .

மேற்படி விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தோட்ட அதிகாரியுடன் கலந்துரையாடியதற்கு அமைய பாதை புனரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டதோடு பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டமும் கைவிடப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்