பெருந்தொகையான போதைப்பொருள்களுடன் இருவர் கைது
கம்பஹா – கடவத்தை, பியன்வல பகுதியில் 12 கிலோகிராம் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், கொக்கைன் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் 32 வயதுடைய பெண்,, 26 வயதுடைய ஆண் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் சந்தேகநபர்கள் தற்போது கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
