பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

சந்தையில்  ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை  அதிகரித்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் புறக்கோட்டை மொத்த சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 260 முதல் 280 ரூபா வரை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சில்லறை விலை 450 ரூபாயாக மாறியுள்ளதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர்.

நேற்று திங்கட்கிழமை லங்கா சதொசவில் ஒரு கிலோ உப்பு 365 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், அரச நிறுவனம் இவ்வாறு விலையை அதிகரிப்பது சரியில்லை எனவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.