
பெரிய கல்லாறு ஸ்டார் விளையாட்டு கழகத்தின் கடற்கரை பூங்கா அங்குரார்ப்பண நிகழ்வு
பெரிய கல்லாறு ஸ்டார் விளையாட்டு கழகத்தின் கடற்கரை பூங்கா அங்குரார்ப்பண நிகழ்வும் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பெரிய கல்லாற்றில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். மற்றும் சிறப்பு அதிதிகளாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுதாகரன், பெரிய கல்லாறு ஆலயங்களினதும், சங்கங்களினதும் பிரதிநிதிகள், பொது நிர்வாக அமைப்புக்களின் உறுப்பினர்கள், மதகுருமார்கள், பொது மக்கள், கழக உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கழக வீரர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வும் நடைபெற்றது. கழக உறுப்பினர்களுக்கு சீருடை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



