
பெப்ரவரி 9 ஆம் திகதி ஏற்பட்ட மின் தடைக்கான காரணம் வௌியானது!
சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமை காரணமாக, தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை குறைந்து பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடு முழுவதும் மின் தடைக்கு வழிவகுத்துள்ளதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
மின் தடைக்கான அறிக்கையை சமர்ப்பித்து அந்த குழு இதனை வௌிப்படுத்தியுள்ளது.
இந்த குழுவின் முழு அறிக்கையும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் பெற்றக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.