பெப்ரவரி 5ஆம் திகதி விடுமுறை?

நாட்டின் சுதந்திர தினம் இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை வழங்கப்படுமா என மக்களிடையே குழப்பநிலை காணப்படுகின்றது.

இந்நிலையில்,  எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவிக்கையில்,

​​4 ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5 ஆம் திகதி விடுமுறை வழங்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.