பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை : வெடிக்கும் போராட்டம்

இந்தியா-கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடமையாற்றிய 31 வயது பெண் பயிற்சி வைத்தியர் ஒருவர் கடந்த 9 ஆம் திகதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார்.

இந்தநிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் கொல்லப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரி கடந்த சில நாட்களாகக் கொல்கத்தா முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய பல்வேறு மருத்துவ சங்கங்களும் இன்று நாடு முழுவதும் பாரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

இதன்காரணமாக பல பகுதிகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்