பெண் மீது வாள்வெட்டு தாக்குதல்!

மாளிகாவத்தை “லக்கிரு செவன” அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரை போதைப்பொருள் தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் பெண்ணின் கைகள் மற்றும் தலையில் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதுடைய பெண் ஒருவரே படுகாயமடைந்துள்ளதுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அடுக்குமாடி குடியிருப்பின் 8ஆவது மாடியில் வசிக்கும் குறித்த பெண், தரைத்தளத்தில் உள்ள வீடொன்றில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, மர்மநபர்கள் வந்து, அவரது தலைமுடியைப் பிடித்து, அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு இழுத்துச் சென்று, சரமாரியாக வெட்டியதாக பொலிஸார் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை குறித்த இடத்தில் இருந்த மக்கள் தாக்க முற்பட்ட போது, இருவரும் ஓடிச்சென்றதாகவும், வீட்டுத் தொகுதிக்கு அண்மித்த வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்