பெண் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த மற்றொரு பெண்
இந்தியாவில் திருவள்ளூர் காய்கறி மார்க்கெட்டில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் அடுத்த புள்ளரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் பார்வதி
தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷுக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி சுரேஷுக்கும் பார்வதிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுரேஷ் காய்கறி கடையை ராஜேஸ்வரி கவனித்து வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சுரேஷின் மனைவி கடந்த 9ம் திகதி காலை 8.50 மணியளவில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள திருவள்ளூர் மார்க்கெட் பகுதிக்கு வந்து காய்கறி கடையில் இருந்த ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வீடியோவில் சுரேஷின் மனைவி குறித்த பெண் இருக்கும் காய்கறி கடைக்கு
வேகமாக வருவதும் பாட்டிலில் தான் கொண்டு வந்த பெட்ரோலை குறித்த பெண் மீது
ஊற்றுவதும், பின்னர் குறித்த பெண் உடல் முழுவதும் தீ பற்றி ஏரியும் காட்சிகள் பதிவாகி பெரும் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும், உடல் முழுவதும் 80 சதவீத தீக்காயத்துடன் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சுரேஷ், சுரேஷின் மனைவி பார்வதி உள்ளிட்ட 8 பேர் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்