பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வாய் மொழியாக பாலியல் துன்புறுத்தல் : இராணுவ வீரர் கைது
மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை வாய் மொழியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 27 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்திற்கு வந்த இருவர் தன்னை ஆபாசமான வார்த்தைகள் மற்றும் தகாத வார்த்தைகளால் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பொலிஸ் பொலிஸில் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த புகாரின்படி, பொலிஸ்; நிலையத்தில் பணியில் இருந்தபோது வந்தவர்களில் ஒருவர் தன்னைப் பற்றி தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததாக தனது முறைப்பாட்டில் குற்றம் சாட்டியுள்ளார்.
உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.