பெண் பாலியல் பலாத்காரம்: சினிமா தயாரிப்பாளர் கைது

இந்தியாவில் சென்னையில் பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இது பற்றி தெரியவருகையில்,

கீழ் அயனம்பாக்கத்தில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் முகமது அலி தனது அலுவலகத்தில் பணியாற்றி வந்த 28 வயது பெண்ணிடம் தனக்கு திருமணமாகவில்லை எனக்கூறி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சத்து மாத்திரை எனக் கூறி கருக்கலைப்பு மாத்திரை வாங்கிக் கொடுத்து கருவைக் கலைத்ததோடு தற்போது தன்னிடமுள்ள வீடியோவை இணையத்தளத்தில் பதிவு செய்து விடுவதாக கூறி மிரட்டுவதாக அந்தப் பெண் பொலிஸாரிடம் புகாரளித்த நிலையில் முகமது அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்